மன்னார் தொற்றாளர்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக பேணவில்லை – வினோதன்

P2100882
P2100882

மன்னார் மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (15) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார். மேலும்,

மன்னார் மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரை 21 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினால் தொற்று ஏற்பட்டுள்ளதை எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனவே பொது மக்கள் அடிப்படையான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் ஊடாக தொற்றில் இருந்து இலகுவாக தப்பித்துக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.