உலகளவில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களிலுள்ளன.
அந்தவகையில் உலகளவில் தற்போதைய நிலவரப்படி, 9,87,36,967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிப்பிலிருந்து இதுவரை 7,09,11,554 பேர் குணமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 16 ஆயிரத்து 159 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,57,09,254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,239 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.