ஆர்ஜென்டீனாவின் முன்னாள் ஜனாதிபதி கார்லோஸ் மெனெம் மரணம்!

EuM4Gl4VIAAlp61
EuM4Gl4VIAAlp61

ஆர்ஜென்டீனாவின் முன்னாள் ஜனாதிபதி கார்லோஸ் மெனெம், நீண்ட காலமாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு, தலைநகர் பியூனஸ் அயர்ஸில் அமைந்துள்ள லாஸ் ஆர்கோஸ் வைத்தியசாலையில் காலமானார் என்று அந் நாட்டு செய்தித்தாளான ‘லா நேசியன்’ ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இறக்கும் போது, மெனெம் (வயது 90) ஒரு செனட்டராக பணியாற்றி வந்தார்.

அவர் 1989 முதல் 1999 வரை அர்ஜென்டினாவின் ஜனாதிபதியாக இருந்தார்.

கவர்ச்சியான வாழ்க்கை முறையை வழிநடத்திய அரசியல்வாதியாக மெனெம் நினைவுகூரப்படுகிறார்.

பால்க்லேண்ட் போருக்குப் பின்னர் மெனெம் இங்கிலாந்துடன் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுத்து வொஷிங்டனிடமிருந்து ஆதரவைப் பெற்றார்.

இந் நிலையில் அவரின் உயிரிழப்புக்காக தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ள தற்போதைய ஆர்ஜென்டீன ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ், நாடளாவிய ரீதியில் மூன்று நாட்கள் துக்க தினத்தையும் அறிவித்தார்.