மட்டக்களப்பில் உள்ளுர் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருள் கண்காட்சியும், விற்பனையும்

1 17
1 17

சர்வதேச மகளிர் தினம் இன்று திங்கட்கிழமை உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன், பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளுர் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருள் கண்காட்சியும் விற்பனையும் மற்றும் சர்வதேச மகளிர் தினமும் “நாடும் தேசமும் உலகமும் அவளே” என்னும் தொனிப் பொருளில் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் எம்.சஜ்ஜாத், நிருவாக உத்தியோகத்தர்கள் எஸ்.அப்துல் ஹமீட், சமுர்த்தி தலைமைய முகாமையாளர் எம்.அஸ{ஸ், செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கைப்பணி மூலம் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், பன் உற்பத்தி பொருட்கள், பலசரக்கு பொருட்கள், பாரம்பரிய உணவு முறைகள், உணவுப் பண்டங்கள் என்பன கண்காட்சி மற்றும் விற்பனை செய்யப்பட்டது.

குறித்த கைப்பணி கண்காட்சியை கலந்து கொண்டர்கள் பார்வையிட்டதுடன், பொருட்களை கொள்வனவு செய்து கொண்டதுடன், மகளிர் தின நிகழ்வில் மகளிர் அமைப்பு பிரதிநிதிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

நாட்டின் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தி பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இவை செயலகத்திற்குட்ட பல்வேறு இடங்களிலும் ஏற்பாடு செய்யப்படும் என்று பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.