மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுத்ததேன்-அஜித் பி பெரேரா

download 1 8
download 1 8

ஏனைய முதலீட்டாளர்களுக்கான விலைமனு கோரல் எதுவும் இன்றி அதானி நிறுவனத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் அபிவிருத்தி வழங்கப்படுவதற்கான பின்புலம் என்ன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கேள்வியெழுப்பினார்.

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில் தகவல் வெளியிடடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையத்தைப் போலவே மேற்கு முனையமும் அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவுடன் ஏற்பட்ட விரிசலால் தற்போது மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது மேற்கு முனைய அபிவிருத்தியை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அனுமதியளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். எனினும் அவரால் கூறப்பட்ட விடயம் உண்மைக்கு புறம்பானதென இந்தியா அறிவித்துள்ளது.

இதன் மூலம் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தவறானது என்பது தெளிவாகிறது. மேற்கு முனைய அபிவிருத்தி ஏனைய முதலீட்டாளர்களுடனான விலைமனு கோரலின்றி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதானி நிறுவனம் உலகின் பல நாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ஒரு நிறுவனமாகும். இதன் காரணமாகவே இந்திய அரசாங்கம் இந்த விவகாரத்திற்கு தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் , இலங்கை அரசாங்கமும் அதானி நிறுவனமும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது என்றும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜப்பான் இதுவரை தமது முதலீட்டாளர்களை அறிவிக்கவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. இவ்வாறிருக்கையில் அவசர அவசரமாக அதானி நிறுவனத்திற்கு வழங்குவதன் பின்புலம் யாது ? இவ்வாறு தான் கொழும்பு துறைமுகத்தின் தென் முனையம் மற்றும் அம்பாந்தோட்டை என்பவற்றுக்கு தாரை வார்க்கப்பட்டன என்றார்.