107 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்

10 நாட்களில் 380 கிலோ கஞ்சா
10 நாட்களில் 380 கிலோ கஞ்சா

கற்பிட்டி, சோமாதீவு பகுதியில் நேற்று (மார்ச் 8) இடம்பெற்ற விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது 107 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட வள்ளம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடத்தல் நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கைகளுக்கு பயந்து சட்டவிரோதமாக கடத்திய கஞ்சாவினை கைவிட்டு சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத கஞ்சாவினை சம்பந்தப்பட்ட சட்ட அமுலாக்க பிரிவிரினரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.