வவுனியாவில் அரச பல் மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்தம்

IMG20210322111110 01
IMG20210322111110 01

நாடாளாவிய ரீதியில் பல்வைத்தியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு வவுனியா அரச பல்வைத்திய அதிகாரங்கள் சங்கமும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று (22) காலை முதல் பல்வைத்தியர்கள் கடமைக்கு சமூமளிக்காமல் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவசர சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

இலங்கை பல்வைத்திய சேவைக்கு எதிரான சதிகளை முறியடிக்கும் வகையில் குறித்த அடையாள பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.