தமிழக தேர்தலில் காலையிலேயே வாக்களித்த பிரபலங்கள்

ba7ecaec 3d78 4aca a7bf 64be2c35be69 e1617680557105
ba7ecaec 3d78 4aca a7bf 64be2c35be69 e1617680557105

16 ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 06 ஆம் திகதி காலை 07.00 மணி அளவில் ஆரம்பமானது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே மக்கள் வாக்களிக்க ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்தனர்.

இன்று இரவு 7 மணி வரை பதிவு நடைபெறுகிறது. 6.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 411 பெண்கள், மீதம் உள்ளவர்கள் ஆண்களாக இருப்பினும், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை தான் அதிகம். தமிழகத்தில் மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில், 3.19 கோடி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மையம் கூட்டணி, அமமுக- தேதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. முதல்வர் கே பழனிச்சாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், அமமுக துணைப் பொதுச் செயலாளர் ரி ரி வி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும், தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியிலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

வாக்கு பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ‘ இந்த தேர்தலுக்காக 88 ஆயிரத்து 938 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு லட்சத்து 29 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 91,180 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 91,180 ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்களும் பயன்படுத்த உள்ளதாக’ தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

காலை நேரத்திலேயே தமிழ் திரையுலகத்தை சேர்ந்த ‘தல’ அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மூத்த நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, நடிகை ஷாலினி உள்ளிட்ட பலரும் தங்களது வாக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.