கிளிநொச்சி பரந்தனில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையம்

IMG 20210517 114609
IMG 20210517 114609

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில்அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றே இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 200 படுக்கை வசதிகளை கொண்டதாக அமைந்துள்ளது. 

இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று முதல் பணிகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளது

இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்திர ரணசிங்க, வைத்தியர்கள், இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் குறித்த வைத்தியசாலையை பார்வையிட்டதுடன், பணிகளை ஆரம்பித்தனர்.