முல்லைத்தீவில் கொரோனா காரணமாக 2153 பேர் தனிமைப்படுத்தலில் – அரசாங்க அதிபர்

DSC01115
DSC01115

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 538 குடும்பங்களை சேர்ந்த 2153 பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தற்போது முல்லைத்தீவு மாவடடத்தில் உள்ள 443 தொற்றாளர்களில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையுடன் தொடர்புபட்ட கொரோனா தொற்றளர்களே அதிமாக காணப்படுகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று காவல் பிரிவுகளில் கடந்த 17 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட முடக்க நிலை இன்று காலை 6.30 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது

முள்ளியவளை காவல் பிரிவில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவும் புதுக்குடியிருப்பு காவல் பிரிவில் 9 கிராமசேவையாளர் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

மக்கள் அத்திய அவசிய தேவைக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.எனவே மக்களை அவதானமாக செயற்படுமாறு தெரிவித்துள்ளார்.