வவுனியா வைத்தியசாலை தாதியர் மற்றும் சிற்றூழியர்களுக்கு தீர்வினை பெற்றுதருவதாக திலீபன் உறுதி!

IMG 20210603 124132
IMG 20210603 124132

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் இன்று நாடுதளுவிய ரீதியில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தவகையில் வவுனியா வைத்தியசாலை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

IMG 20210603 123951 1
IMG 20210603 123951 1

அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேட கொடுப்பனவு, விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமூகமளித்தால் விசேட கொடுப்பனவு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் கொரோனா தடுப்பு செயலணி அமைத்தல் உட்பட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்தே இன்று பிற்பகல் 12 மணியிலிருந்து 12:30 வரையும் இடம்பெற்றிருந்தது.

IMG 20210603 124011 1
IMG 20210603 124011 1

வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற போராட்ட இடத்திற்கு வருகைதந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குறித்த பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் தீர்வினை பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார். பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போது இவர்களினுடைய போராட்டம் நியாயமானது. எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியுடனான ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுத்து நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.