தண்ணிமுறிப்பு விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படவில்லையென தெரிவிப்பு.

image af02058a32
image af02058a32

குமுளமுனை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் விவாசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கமநல சேவை நிலையத்தில் இருந்து முழுமையாக உரம் வழங்கப்படவில்லையென, விவாசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக குமுளமுனை கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.சயேந்திரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு வினவியபோது…

தண்ணிமுறிப்புக் குளத்தின் கீழ், 2,700 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றதெனவும் இதில், 1,500 ஏக்கருக்கான உரம் வழங்கப்பட்டுள்ளதெனவும் கூறினார். இன்னும், 1,200 ஏக்கருக்கான உரமே வழங்கப்பட வேண்டி உள்ளதாகவும், அவர் கூறினார்.

முல்லைத்தீவு – குமுளமுனை கமநல சேவை நிலையத்தில், தற்போது உரம் சேமிப்பில் இல்லை .களஞ்சிய வசதிகள் இருந்திருக்குமானால், கூடுதலான உரங்களை சேமித்து வைத்து இருக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினர்.எனினும் விவாசாயிகளுக்கு உரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.