மட்டக்களப்பில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு- 99பேருக்கு தொற்றுறுதி!

WhatsApp Image 2021 06 07 at 10.54.55 1 1
WhatsApp Image 2021 06 07 at 10.54.55 1 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் மாவட்டத்தில் தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து 58 பேர் உயிரிழந்துள்ளதுடன் 97 பேர் தொற்று உறுதிகண்டறியப்பட்டுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை (15) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

கொரோனா வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளர்.

அதேவேளை மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கீழ் உள்ள சுகதார வைத்திய அதிகாரி பிரிவுகளான மட்டக்களப்பில் 11 பேரும், களுவாஞ்சிக்குடியில் 03 பேரும், வாழைச்சேனையில் 08 பேரும், காத்தான்குடியில் 11 பேரும்,

ஓட்டமாவடியில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தி 11 பேரும், செங்கலடியில் ஒருவரும், ஏறாவூர்ரில் 26 பேரும், வாகரை 02 பேரும், பட்டிப்பளை 05 பேரும், ஆரையம்பதி 09 பேரும், வெல்லவெளி 08 பேரும், காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட்ட 97 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது .

இதேவேளை கொரோனா தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்பிரல் 22 ம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 49 பேர் உயிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 58 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.