கோறளைப்பற்றில் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கி வைப்பு

01 8 4
01 8 4

நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தினால் கொடுப்பனவு நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலின் வழிகாட்டலில் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக 1798 நபர்களுக்கும், முதியோருக்கான தேசிய செயலகம் ஊடாக 634 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் தேசிய செயலகம் ஊடாக 159 மாற்றுத் திறளானிகளுக்கும் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவுகள் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், கிராம அதிகாரிகள், சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுப்பனவினை வழங்கி வைத்தனர்.

இதன்போது பிரதேச செயலக பிரிவிலுள்ள ஒன்பது கிராம அதிகாரிகள் பிரிவிலும் மாதாந்த கொடுப்பனவு பெறும் நபர்களுக்கு இருப்பதாறு இலட்சம் ரூபாய் நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.