அமெரிக்க இராஜாங்க பிரதி செயலாளர் – சீன வெளிவிவகார அமைச்சரிடையே சந்திப்பு!

Tamil News large 2546002
Tamil News large 2546002

அமெரிக்காவின் இரண்டாவது உயர்நிலை இராஜதந்திரியும், இராஜாங்க பிரதி செயலாளருமான வெண்டி ஷேமன் இன்று சீன வெளிவிவகார அமைச்சர் வெங் யீயை சந்திக்க உள்ளார்.

சீனாவின் ரியஞ்சின் நகரில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தக முரண்பாடுகள், இணையவழித் தாக்குதல், சீனா இராணுவ கட்டமைப்பை விஸ்தரித்தல் போன்ற விடயங்களில் தொடர்ச்சியான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரு முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில், இந்த விடயங்கள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்படும் என வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.