வவுணதீவு விசேட அதிரடிப்படையினர் இரத்ததானம் வழங்கல்

IMG 5158
IMG 5158

மட்டக்களப்பு வவுணதீவு விசேட அதிரடிப்படையினர்  இராணுவ வீரர்களின் 37 வது  நினைவேந்தலை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு  இரத்தத்தை தானம் வழங்கும் நிகழ்வு வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாமில் இன்று திங்கட்கிழமை (09) இடம்பெற்றது.

 இந்த இராணுவ வீரர்களின் நினைவேந்தல் எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறும் நிலையில் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சட்டத்தரணியும் பிரதி காவல்துறைமா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின்  எண்ணக்கருவுக்கமைய அம்பாறை கட்டளைத்தளபதி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜே.ஆர். சேனாதீர வழிகாட்டலில் மட்டக்களப்பு பிரதேச படையணியின் கட்டளைத்தளபதி உதவி காவல்துறை அத்தியட்சகர் டி.சி. வேட்டவிதான ஆலோசனையில் வவுணதீவு விசேட அதிரடி படை முகாம் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் டபிள்யூ. ஜீ, எஸ். ஹயப்பிரிக தலைமையில் இந்த இரத்தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் 50 மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் மற்றும் உயிரிழந்த அதிரடிப்படை வீரரான 26720 கே.எம்.எம். நவாஸ் குடும்ப உறவினர்கள் கலந்துகொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு  இரத்தத்தை தானமாக வழங்கினர்.