தப்பி ஓடிய தொற்றாளர்கள்;கிராமத்தில் 32 பேருக்கு தொற்று!

IMG a2d61c56affbf5a4ef0c3d669253eae9 V
IMG a2d61c56affbf5a4ef0c3d669253eae9 V

வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

IMG 291bd3dbe4c9fdb58dd4c2b5d70cf30f V

குறித்த கிராமத்தினை சேர்ந்த 3 பேர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றனர். அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஆயினும் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் தங்காமல் தப்பிச்சென்றிருந்தனர். இது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதார பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடாத்தி ஏழு நபர்களை தனிமைப்படுத்தியிருந்தனர்.

IMG 7bbcf674fa471d1b5f9a2fb11b1179a2 V

எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அதனை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர்,
இது தொடர்பாக சுகாதார பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியை சேர்ந்த 150 பேரிடம் நேற்றையதினம் அன்டிஜன் பரிசோதனையினை முன்னெடுத்தனர்.

IMG 441d643d424af035057004c90d68ca31 V

அதில் 32 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் அனேக மக்கள் நாடோடிகள் இனம் என்பது குறிப்பிடத்தக்கது.