வவுனியாவில் 239 பேருக்கு கொரோனா:ஏழுபேர் மரணம்!

202106082232341659 Corona infection SECVPF
202106082232341659 Corona infection SECVPF

வவுனியாவில் கொரோனா தொற்று 239 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில நேற்று (01) இரவு வெளியாகியுள்ளன.

வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கொரோனா தொற்று 239 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நேரியகுளம், றம்பைவெட்டி, வேப்பங்குளம்,வோகஸ்வெவ,  இளமருதங்குளம், தோணிக்கல், சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 25,54,59,60,68,71, 72 வயதுடைய ஏழுபேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். 

இந்நிலையில் தொற்றாளர்களை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் மரணித்த நால்வரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்யவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்று முன் தினம் அதிகபட்சமாக 302 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நான்கு மரணங்களும் நிகழ்ந்துள்ளது.


வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரை கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 3328 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 50 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.