வவுனியாவில் கொவிட் தொற்றால் 6பேர் மரணம்

corona
corona

வவுனியாவில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் ஆறு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

திடீர் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் நேற்றையதினம் (02) மரணமடைந்தனர். இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் ஆண்டியாபுளியங்குளம், கந்தசாமிகோவில் வீதி, செட்டிகுளம் , தவசிகுளம் , வேப்பங்குளம் , றம்பைக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 46,47,60,63,83,86 வயதுடைய ஆறுபேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மரணித்த ஆறு பேருடைய உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நாளாந்தம் மரணமும் அதிகரித்து செல்கின்றது. கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 50 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.