உலகம் சுற்றிய பெண்ணிடம் ஆலோசனை கேட்ட அஜித்!

samayam tamil 11
samayam tamil 11

படங்களில் நடிப்பது தவிர்த்து மோட்டார் வண்டி ஓட்டுவது என்றால் அஜித்துக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தன் ஸ்போர்ட்ஸ் மோட்டார் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்.

வலிமை படப்பிடிப்புக்கு இடையே இடைவெளி கிடைத்தபோது மோட்டார்வண்டி சவாரி சென்றார். காட்சியை படமாக்க ரஷ்யா சென்றபோது அங்கும் கூட சவாரி சென்றார் அஜித்.

மோட்டார் வண்டியில் உலகம் சுற்றி வர வேண்டும் என்பது அஜித்தின் ஆசை. இந்நிலையில் அவர் ஆசைப்படுவது போன்று தன் மோட்டார் வண்டியில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யாசர்லூ என்கிற பெண் டெல்லிக்கு வந்திருக்கிறார்.

இது குறித்து அறிந்த அஜித் டெல்லிக்கு சென்று அவரை சந்தித்து பேசியிருக்கிறார். மாரல் தன் மோட்டார் வண்டியில் 7 கண்டங்கள், 64 நாடுகளை கடந்திருக்கிறார்.

எதிர்காலத்தில் தன் மோட்டார் வண்டியில் உலகம் சுற்றும் திட்டத்தில் இருக்கும் அஜித் அந்த பெண்ணிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அஜித்தின் முகாமையாளர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.