மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இலங்கைக்கு மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசிகள் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது

நெதர்லாந்திலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி முன்னதாக இந்தத் தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.