ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட வேண்டும் – சஜித்

ரஞ்சன் ராமநாயக்க
ரஞ்சன் ராமநாயக்க

ரஞ்சன் ராமநாயக்க தற்போது நாடாளுமன்றத்தில் இல்லாதது பாரிய குறைபாடாகும்  எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலஞ்ச, ஊழல்களுக்கு எதிராகக் குரல்கொடுத்து வந்த ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் எனவும் எதிர்க்கட்சித் தலைர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தாா்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவை நலம் விசாரிப்பபதற்காக அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று எதிர்க்கட்சித் தலைவர் சென்றிருந்தாா். வெளியே வந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நிதி மோசடி, இலஞ்ச – ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களின் சொத்துக்களை சூறையாடிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதில்லை. அவர் தன்னிடமுள்ள சொத்துகளைக் கூட பொதுமக்களுக்காக அர்ப்பணிப்பு செய்யக்கூடிய மனிதாபிமானமிக்கவர்.

மக்களின் நலனுக்காகச் செயலாற்றும் நற்பண்பு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இருக்கின்றது. அவர் பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் உருவான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறிதளவுகூட சிந்திக்காமல் மக்களுக்காக முன்வந்தவர்” – என்றார்.