நல்லாட்சியை கொடுப்பதற்காக உருவாக்கிய ஆட்சியை கலைக்க மாட்டார்கள் – மஸ்தான்

IMG 20211026 17264821
IMG 20211026 17264821

நல்லாட்சியை கொடுப்பதற்காக மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக உருவாக்கிய ஆட்சியை கலைப்பதற்கு மாற்று கட்சிகள் எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை வாழ் மக்களுடைய ஆரோக்கியத்திற்காக எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல்படுத்தும் போது ஒரு பகுதி பாதிக்கப்படுகின்றது. அதனால் இவ்வாறான போராட்டங்கள் நடக்கின்றது. இருந்தாலும் கிராம மட்டங்களிலும் சரி, பிரதேச மட்டங்களிலும் தெளிவுபடுத்தப்பட்டு அவர்களிற்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் குறித்து அரசாங்கம் நிவாரணம் வழங்குவதற்கு இருக்கின்றது.

மக்களின் ஆரோக்கியத்திற்காக எடுக்கின்ற முடிவுகளிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டு கொள்வதோடு மக்களுடைய பாதிப்புக்கள் தொடர்பாகவும் நாங்கள் பேசிக்கொண்டு தான் இருக்கின்றோம்.
மக்களுடைய பிரச்சினை தொடர்பாக உயர் மட்டங்களுடன் பேசிக்கொண்டு தான் இருக்கின்றோம். இது தொடர்பாக நல்ல விடயம் எதிர்காலத்தில் எடுக்கப்படும். 

வரவு செலவு திட்டத்திற்கு பின்னர் அமைச்சரவையில் பாரியமாற்றம் ஏற்படுமா என வினவிய போது, இது தொடர்பாக எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் இந்த கொரோனா வைரஸ் நோய் காரணமாக வரவு செலவு திட்டத்திற்கு பின்னர் மாற்றங்கள் இருக்கும் என எதிர் பார்க்கவில்லை. இருப்பினும் முடிவுகள் உயர்மட்டத்தில் தானே அவர்கள் எடுப்பார்கள் என்ன நினைத்திருக்கிறார்கள் என தெரியாது. 

உங்களுடைய கட்சியில் இருந்து பங்காளிக்கட்சிகள் சில பிரிந்து செல்கின்ற  நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் உங்களுடைய ஆட்சி எவ்வாறு நிலைத்திருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற போது, கருத்து முரண்பாடுகள் இருக்கும் அவ்வாறு பேசுவார்கள். பல கட்சிகள் சேர்ந்து தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எடுத்திருக்கின்றோம். அவ்வாறான அடிப்படையில் கருத்துக்களை வெளியே தெரிவிக்கின்றதை தவிர ஏனைய கட்சி தலைவர்களுடன் பேசி நல்ல முடிவுகளை எடுப்பார்களே தவிர மக்களிற்கு விரைவில் நல்லாட்சியை கொடுப்பதற்காக மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக உருவாக்கிய ஆட்சியை கலைப்பற்கு மாற்று கட்சிகள் எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

இந்த ஆட்சி அமைப்பதற்கு அதிகளவான மக்களும் மதத்தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தார்கள், வாக்களித்திருந்தார்கள். இரண்டு வருடத்திலே அரசாங்கத்திற்கு எதிராக திரும்புகின்ற நிலையே ஏற்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக, எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி இந்த நிலைமைகளை ஏற்படுத்துகின்றார்களே தவிர வேறெதுவும் இல்லை. கடந்த நல்லாட்சியில் உங்களுக்கு தெரியும் போராட்டமும் இல்லை. மாற்றமும் இல்லை ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதேபோல் பிரச்சினைகளை மக்கள் வெளிப்படுத்தினாலும் அதற்குரிய தீர்வுகளையும் அவர்களிற்குரிய நிவாரணங்களை யும் எங்களுடைய தலைவர்கள் வழங்கியவுடன் எல்லாம் இல்லாமல் போய்விடும். 
பிரச்சினைகள் இருக்கும் அதெல்லாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றோம். அவர்களுடைய குறைகள் தீர்க்கப்பட்டு எதிர்காலத்தில் தேர்தல்களிலும் எமது அரசு பாரிய வெற்றியை பெறும் என முழு நம்பிக்கை இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.