ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார்.
நடப்பு டி-20 உலகக் கிண்ண போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசரங்கா, தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
776 புள்ளிகளுடன் தற்சமயம் குறித்த பட்டியலில் ஹசரங்க முதலிடம் வகிக்கும் நிலையில், தென்னாபிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சி இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளார்.
இதேவேளை ஐ.சி.சி. டி-20 கிரிக்கெட்டின் சகலதுறை ஆட்டக்காரர் பட்டியலிலும் ஹசரங்க நான்கு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல்ஹசன் 271 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஹசரங்க 2021 இல் சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக (34) விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.