மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையிடம் ஐ.ரோ ஒன்றியம் வலியுறுத்தல்!

EU
EU

இலங்கையில் மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதத்திற்கும், ஐரோப்பிய ஒன்றிய கவுன்ஸிலின் தலைவர் டொனால்ட் டஸ்க்கிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இச் சந்திப்பின் போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அண்மைக்காலமாக வலுவடைந்திருக்கும் இருதரப்பு உறவு குறித்தும், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டமை தொடர்பிலும் இருதரப்பினராலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

தற்போது இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் காணப்படுவதுடன், அதனுடனான வாணிபத்தின் மூலமான வருடாந்த வருமானம் 5 பில்லியன் யூரோவிற்கும் அதிகமாக உள்ளமை குறித்தும் ஆராயப்பட்டது.