பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களைகட்டிய வியாபாரம்

IMG 20220413 WA0007
IMG 20220413 WA0007

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளது.

IMG 20220413 WA0026

தமிழ் – சிங்கள புதுவருடம் நாளை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வவுனியா நகருக்கு வருகை தரும் மக்கள் மழைக்கு மத்தியிலும் புத்தாடைகள், இனிப்பு பொருட்கள், வெடிகள் என்பவற்றையும் மரக்கறிகளையும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

IMG 20220413 WA0022

இதனால் வவுனியா நகரம் சனநெரிசல் மிக்கதாக காணப்படுவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளில் காவற்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.