எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு – வலுசக்தி அமைச்சர்

kanchana wijesekara
kanchana wijesekara

தொடருந்து, அரச முகவர் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், சில தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகள் விநியோக பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் துரிதகதியில் இடம்பெறும் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்படுவதாக அமைச்சர் ருவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது கிராமப்புறங்களுக்கு தொடருந்துகளில் கொண்டு செல்லப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்கவும், டிப்போக்களுக்குத் தேவையான எரிபொருளை மட்டும் தொடருந்துகளில் கொண்டு செல்லவும் அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான புதிய அறிவுறுத்தல்களை அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று வெளியிட்டார்.

எவ்வாறாயினும், நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் இன்னமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.