எவருக்கும் மானிய விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவது இல்லை – கஞ்சன விஜேசேகர

124427938 kanchanawijesekera02
124427938 kanchanawijesekera02

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ருவிட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் அவர், மக்களின் விரக்தி மற்றும் கோபத்தை புரிந்துக்கொள்ள முடிகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக வெளியாகும் தகவல் பொய்யானது, தற்போது சந்தையில் ஒரே விலையிலேயே எரிபொருள் வழங்கப்படுவதாகவும், எந்த தரப்பினருக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை தரிப்பிடங்களில் உள்ள பம்பிகளில் காட்சிப்படுத்தப்படும் கட்டணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எவருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சலுகைகள் காட்டக்கூடாதென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.