சிறுபோக நெற்செய்கை விவசாயிகளுக்கு எரிபொருளை விநியோகிக்க விசேட நடவடிக்கை

kilu 1
kilu 1

சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அவசியமான எரிபொருளை விநியோகிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுபோக நெல் செய்கைக்கான எரிபொருள் இன்மையால், விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சிறுபோகத்திற்கு அவசியமான எரிபொருளை விரைவில் விநியோகிக்கும் திட்டத்தை உடனடியாக தயாரிப்பதற்காக, விவசாய அமைச்சில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, விவசாய பணிப்பாளர் நாயகத்தினால், 25 மாவட்டங்களையும் உள்ளீர்க்கும் வகையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக, தெரிவுசெய்யப்பட்ட 217 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பெயர்ப்பட்டியல் விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக, விவசாயிகளுக்கு அவசியமான எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, சிறுபோகத்திற்கு அவசியமான எரிபொருளை வழங்க வலுசக்தி அமைச்சர் இணங்கியதாக, விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, விவசாயிகள் தங்களது எரிபொருள் தேவை குறித்து, கமநலசேவை திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்ட கடிதத்தை முன்வைப்பதன் மூலம், அனுமதிபெற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவசியமான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.