பெரும்பான்மையான உறுப்பினர்களின் இணக்கத்தின்படியே தீர்மானம் – க.வி.விக்னேஷ்வரன்

vikki
vikki

பெரும்பான்மையான உறுப்பினர்களின் இணக்கத்தின் அடிப்படையிலேயே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் தன்னிச்சையான தீர்மானங்களை எடுப்பதாக ஈழத்தமிழர் சுயாட்சி கழகப் பொதுச் செயலாளரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பில், எமது செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்னேஸ்வரன், கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியதன் பின்னரே எந்தவொரு தீர்மானமும் இறுதி செய்யப்படும் என குறிப்பிட்டார்.

அந்த தீர்மானங்கள் கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

அதற்கு ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டால், அந்த விடயம் குறித்து மறுபரீசிலனையும் செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

நீண்ட நாட்களாக கூட்டணியின் கலந்துரையாடல்களில் அனந்தி சசிதரன் பங்கேற்பதில்லை எனவும்க வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் மக்களின் தீர்க்கப்படாதுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகளிடம் ஒருமித்த கொள்கை நிலவுவதால் இணைந்து பயணிப்பது சாத்தியமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.