வட அமெரிக்காவில் பனிப்புயல் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

22 63a8581f9475a
22 63a8581f9475a

அமெரிக்கா மற்றும் கனடாவை பனிப்புயல் தொடர்ந்தும் தாக்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வட அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள உறை பனி மற்றும் பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

நியூயோர்க் மாநிலத்தின் ப்லோ நகரமே இந்த அனர்த்தம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிக பனிபுயல் காரணமாக வீதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 1.7 மில்லியன் மக்களுக்கு பனிப்புயல் காரணமாக மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.