ஸ்பெயினில் ஏற்பட்ட பெருவெள்ளம்!

flood
flood

தென்கிழக்கு ஸ்பெயினில் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ள அனர்த்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கையும், பொது போக்குவரத்துக்களும் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள ஸ்பெய்ன் அரசாங்கத்தின் உள்ளூர் பிரதிநிதி பிரான்சிஸ்கோ ஜிமெனெஸ் “அதிகபட்ச முன்னெச்சரிக்கையை” எடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

ஸ்பெயினின் அதிகாரிகளினால் முர்சியாவில் உள்ள மக்கள் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டதுடன் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான வகுப்புக்கள் ரத்து செய்யப்பட்டன. பலத்த மழை காரணமாக அல்மேரியா மற்றும் முர்சியா விமான நிலையங்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளன.

ஸ்பெயினின் செயல் பிரதம மந்திரி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை அனுப்பியதாகவும் கூறினார்.

ஆகஸ்ட் மாத இறுதியில் இதேபோன்ற வானிலை மத்திய ஸ்பெயினின் சில பகுதிகளைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.