இலங்கையில் 8ஆவது கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்

33 oad
33 oad

இலங்கையில் 8ஆவது கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டுள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று மாலை அறிவித்துள்ளார்.

கந்தக்காடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்களில் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

42 வயதுடைய குறித்த நபர் பொலனறுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மொத்தமாக மூன்று பேருக்கு இதுவரை கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கந்தக்காடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் மற்றும் நாத்தாண்டிய பிரதேசத்தில் ஒருவரும் இதற்கு முன்னர் இனங்காணப்பட்டிருந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

அவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என அவர் மேலும் கூறியிருந்தார்.

அதேபோல் நேற்று வரைக்கும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, இதுவரை 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பொலனறுவை மற்றும் கொழும்பு அங்கொடை தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.