சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

gas 1
gas 1

இன்று (Oct.04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்கமைவாக 12.5Kg எடை கொண்ட சமையல் எரிவாயு சிலின்டரின் விலை 240 ரூபாவால் குறைவடைக்கப்படுகிறது. 5 Kg எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 95 ரூபாவினால் குறைவடைகிறது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கும் லிட்ரோ கேஷ் நிறுவனத்திற்குமிடையில் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இந்த விலை குறைப்பு இடம்பெற்றுள்ளது.