காட்டு யானைகளின் தொல்லையால் தினமும் உயிர் அச்சத்தில் வாழும் கொஸ்லந்த மக்கள்

ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொஸ்லந்த மக்கள்தெனிய கீழ்பூனகலை மற்றும் கபரகல  ஆர்னோல் மீரியபெத்த  அம்பராகல ஆகிய தோட்ட பிரிவுகளில்  வாழும் மக்கள்  காட்டு யானைகளினால் பெரும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளனர்.

vlcsnap 2020 06 13 13h23m07s644

பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலை தோட்டங்களை உரியமுறையில்  பராமரிப்பு செய்யாமையினால்    இன்று பெருந்தோட்டங்கள் காடுகளாகவே உள்ளது இவ்வாறு காடுகளாக்கப்பட்டு கைவிடுவதால்  காட்டு விலங்குகள் பெருந்தோட்ட பகுதிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளது  இதனால் பெருந்தோட்ட பகுதி மக்கள்  பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் சூழல் உருவாகி உள்ளது.  

vlcsnap 2020 06 13 13h23m36s514

இந்த கொஸ்லந்த  பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட பகுதி மக்கள்   மாலை தொடக்கம் காலை சூரிய உதயம் வரை பெரும் அச்சத்துடனே வீடுகளில் முடங்கி இருக்கும் நிலை காணப்படுகின்றது.  இப்பிரதேச மக்களின் வாழ்வாதரமாக  இருக்கும்  வீட்டுத்தோட்ட பயிர்களும் இந்த காட்டு யானைகளினால் சேதமாக்கப்படுகின்றது. 

vlcsnap 2020 06 13 13h23m56s490

இரவு நேரங்களில் அவசரதேவைகளுக்காக நோயாளியை வைத்தியசாலைக்கு ௯ட கொண்டு செல்ல முடியாத நிலை  இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் உருவாகி உள்ளது. இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்களை காட்டுயானைகள்  தாக்கிய சம்பங்களும் பதிவாகியுள்ளது.

vlcsnap 2020 06 13 13h26m26s320

இந்த பிரச்சினைகள் குறித்து பல உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும்  எந்த விதமாற்றமும் இடம்பெறவில்லை. காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து    ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொஸ்லந்த மக்கள்தெனிய கீழ்பூனகலை மற்றும் கபரகல  ஆர்னோல் மீரியபெத்த  அம்பராகல ஆகிய தோட்ட பிரிவுகளில்  வாழும்  பிரதேச மக்களை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கேட்கின்றனர்.

vlcsnap 2020 06 13 13h23m51s854