சாதகமான உறுதிமொழியை வழங்குபவரிற்கே ஆதரவு

Unemployed graduates
Unemployed graduates

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (Oct.13) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.

தமக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டபோதும் தமக்கான சாதகமான உறுதிமொழிகளை வழங்குபவரை ஆதரிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் க.அனிதன் கருத்து தெரிவிக்கையில்

“இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்தாலும் வேலையற்ற பட்டதாரிகளை புறக்கணிக்கும் வகையிலான செயற்பாடுகளையே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அதன் காரணமாகவே நாங்கள் தேர்தலை புறக்கணிக்கும் தீர்மானத்தினை எடுத்தோம்.

இலங்கையில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் இரண்டு இலட்சத்து 30ஆயிரம் வாக்குகள் இருக்கின்றது. அனைத்து வாக்குகளையும் இந்த தேர்தலில் புறக்கணிப்பிற்காக பயன்படுத்துவோம்.

படித்த பட்டதாரிகள் வேலைக்காக போராடிக் கொண்டிருக்கும் போது சாதாரண தரம், உயர்தரம் படித்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் சில அமைச்சர்களும் முட்டுக்கட்டையாக இருப்பதான தகவல்களும் எங்களுக்கு உறுதியாக கிடைத்துள்ளது. நியமனங்களுக்கு பணத்தினைப் பெற்றுக்கொண்டு எங்களை புறந்தள்ளும் செயற்பாடுகளை சிலர் செய்துவருகின்றனர். இவ்வாறானவர்கள் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும்போது இதன் எதிர்வினைகளை அனுபவிக்கும் நிலையேற்படும்” என்று தெரிவித்தார்.