காரைதீவு மீனவர் மரணம் தொடர்பான வாய்முறைப்பாடு

fishermen
fishermen

கடந்த 18.09.2019ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்களான சாய்ந்தமருதைச் சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின், இஸ்மா லெப்பை ஹரீஸ் ஆகியோர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தங்களது வாய்முறைப்பாடினை பதிவு செய்துள்ளனர்.

ஆமை இரத்தத்தை தினமும் குடித்து இறந்த சக மீனவரின் பூதவுடலை ஆறு நாட்களாக உடன் வைத்திருந்த நிலையில் இறுதியாக கடலில் தூக்கி போட்டோம் என கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இறந்த சக மீனவரான காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் என்பவர் கடலிற்குச் சென்று 10 நாற்களின் பின் இறந்ததாகவும் அவரின் உடலை தாங்கள் 6 நாட்களாக தங்களுடன் வைத்துக் கொண்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவருடைய பூதவுடலை தங்களின் மிதக்கும் உடையில் சுற்றி கடலில் விட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இந்நிலையில் இறந்த மீனவரின் கு டும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துள்ளதுடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீனவ அமைப்புக்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். நாங்கள் கடலில் தத்தளித்த வேளையில் கரைக்கு கொண்டு வருவதற்கு உதவிய சகோதர இன மீனவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் எம்மை எந்தவொரு அமைச்சர்களோ எமது சமூகம் சார்ந்த அரசியல்வாதிகளோ வந்து ஆறுதல் கூட சொல்லவில்லை. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்மையினாலே இவ்வாறான உயிரிழப்புகளும் உடமையிழப்புகளும் நிகழ்கின்றன.உயிரைப் பணயம் வைத்து கடலுக்கு செல்லும் இந்த மீனவர்களின் உழைப்பை நம்பி பல குடும்பங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.