சுகாதார பாதுகாப்போடு பொதுத்தேர்தலை நடத்தவே அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது

1584280083 6 month prison sentence for concealing coronavirus infection B
1584280083 6 month prison sentence for concealing coronavirus infection B

தேர்தல் நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குமாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்து இங்குள்ள நிலமைகளை ஆராய்ந்துள்ளார்.

இதன்போது ஊடகங்களை சந்தித்து அவர் கருத்து தொிவிக்கையில், பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க இன்றைய தினம் நாங்கள் வடக்கிற்கு வருகை தந்துள்ளோம். வடக்கு மாகாணத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் திணைக்களத்துடனும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராயவுள்ளோம். அதேபோல் வவுனியாவுக்கும் செல்லவுள்ளோம். இன்று வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு

தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டங்களை நடத்தவுள்ளோம். அதில் பல்வேறு விடயங்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்எமக்கு தற்போது உள்ள ஒரு பிரச்சனை
கொவிட்- 19 வைரஸ் பிரச்சினை ஆகும். இது உலகம் முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை. உலக சுகாதார நிறுவனம் எப்போது கொவிட் – 19 இல்லை என அறிவிக்கின்றதோ அன்றுவரை எமக்கு இந்த கோரானா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் காணப்படும்.

எனவே அந்த நிலையிலும் எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் நாம் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு உள்ளோம். அதாவது தனிமைப்படுத்தல் சட்டம் சுகாதார நடைமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை பின்பற்றி எதிர்வரும் தேர்தலை நடாத்த நாங்கள் முயற்சிக்கின்றோம். அதேபோல் தேர்தல் திணைக்களமும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே அனைவரின் ஒத்துழைப்போடும் குறிப்பாக பொதுமக்களின் ஒத்துழைப்பு இந்த விடயத்தில் மிகவும் முக்கியமானது.

அதாவது அனைவரும் முகக்கவசம் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதேபோல் சுகாதாரத் திணைக்களத்தின் சுகாதார நடைமுறைகளை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பது எமது கோரிக்கையாக இருக்கிறது.

அதேபோல் தேர்தல் முறையில் எவர் ஈடுபட்டாலும் அது சட்டத்துக்குரிய குற்றம் ஆகும். எனவே அது எவராக இருந்தாலும் தேர்தல் வன்முறையுடன் சம்பந்தப்பட்டு எமக்கு முறைப்பாடு வழங்கப்படும் இடத்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்