தினமும் தூக்க மாத்திரையை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்

unnamed 1 7

தினமும் தூக்க மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்

  • தூக்க மாத்திரைகள் பகல் நேர தூக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதனால் மனநிலையில் குழப்பம் ஏற்படும். பணிகளில் கவனம் செலுத்துவது சவாலாகவே இருக்கின்றன.
  • தூக்க மாத்திரைகள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இன்சோமேனியாவை குறைக்கிறது. இதனால் தலைவலி மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
  • இவை தூங்கும்போது சுவாசப்பாதையில் தடையை ஏற்படுத்தி மூச்சுத்திணறலை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன.
  • தூக்க மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் உண்டாகும் அபாயம் ஏற்படுத்தும். இதிலுள்ள பல்வேறு வகையான சேர்மங்கள் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால் நுரையீரல் புற்றுநோய் உண்டாகிவிடும்.
  • ஒரே நேரத்தில் அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது கோமா அல்லது மரணத்தை கூட ஏற்படுத்திவிடும்.
  • வயதானவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமாம். ஏனெனில், இந்த மருந்து உடலில் கரைய அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் காலையில் எழுவது மிகவும் சிரமமானதாக இருக்குமாம்.
  • இதனால் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையும். அத்துடன் நிம்மதியற்ற தூக்கமே கிடைத்துவிடும்.
  • வலி நிவாரணிகளை பயன்படுத்துபவர்கள் தூக்க மாத்திரைகளை உபயோகிக்காமல் இருப்பது சிறந்தது. ஏனெனில் இரண்டு மருந்துகளும் இணையும்போது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துமாம்.
  • தூக்க மாத்திரைகளை சாப்பிடவுடன் வாந்தி, குமட்டல், வேர்வை போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ளலாம்.