பிரபலங்களை விமர்சிப்பது என்பது ரசிகர்களுக்கு சாதாரணமாகி விட்டது.
பெரிய பிரபலமோ, சின்ன பிரபலமோ யாரையாவது விமர்சிக்க வேண்டும் என்றால் ரசிகர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் செய்கிறார்கள்.
ஆனால் நடிகைகளுக்கு வரும் விமர்சனங்கள் அதிகமாவே உள்ளது. அண்மையில் பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் பதிவு செய்து வருகிறார்.
அப்படி ஒரு புகைப்படம் கீழ் ரசிகர் ஒருவர், உங்களது மூக்கை அறுவை சிகிச்சை செய்யுங்கள் என்று பதிவு செய்தார். அதற்கு எஸ்தர், எதற்காக செய்ய வேண்டும், எனது மூக்கு எனக்கு பிடிக்கும் என பதில் அளித்துள்ளார்.