கரிபியன் தீவுகளில் தற்போது இடம்பெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக் 20 க்கு 20 கிரிக்கட் தொடரில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைய்ன் பிராவோ பெற்றுள்ளார் .
நைட் ரைடர்ஸ் அணிக்காக டுவைய்ன் பிராவோ விளையாடுகின்றார்.
இந்த நிலையில், செயிண்ட் லூக்கா சோகஸ் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில், டுவைய்ன் பிராவோவின் பந்து வீச்சில் லூக்கா அணியின் ரஹீம் கொன்வெல் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
அவரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 20 க்கு 20 போட்டிகளில் 500 விக்கட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை டுவைய்ன் பிராவோ பெற்றார்.
20 க்கு 20 போட்டியில் அவருக்கு அடுத்த படியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இலங்கை அணியின் லசித் மாலிங்க 2 ஆம் இடத்தில் உள்ளார்.
லசித் மாலிங்க 20 க்கு 20 கிரிக்கட்டில் போட்டிகளில் இதுவரை 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.