மழைக்கால நோய்கள்- எதிர்கொள்வது எப்படி

common cold during rainy season 696x522 1
common cold during rainy season 696x522 1

கொரோனா காலத்தைத் தொடர்ந்து இப்போது மழைக்காலமும் தொடங்கிவிட்டது! இதுவரை கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நாம் இனி, மழைக்காலத்தில் வரும் நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மழைக்காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். வெளியிடங்களில் நடமாடுவதையும் முதியவர்கள் குறைத்துக்கொள்வார்கள் என்பதால் உடல் சற்று இறுக்கமாக இருக்கும். தண்ணீர் அருந்துவது குறைவதாலும், உடல் இயக்கம் குறைவதாலும், உடல் இறுகி மலச்சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும்.

மழைக்காலம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் பலவித நோய்களைக் கொண்டுவருகிறது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு கால்நடை விவசாயிகள் கூடுதல் விழிப்போடு செயல்பட்டால், நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு, தங்கள் பொருளாதார இழப்பையும் தடுக்கலாம்.

மழைக்காலங்களில் நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள் என்று ஆராய்ந்தால், 5 நோய்கள் முக்கியமானவை. அவை

வெள்ளைக் கழிச்சல்
சளி மற்றும் சுவாசக் கோளாறு
வாத நோய்
கோழிக்காய்ச்சல்
தோல் முட்டை இடுதல்
மழைக்காலங்களில் நம்மை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை

ஈரமான ஆடை

ஈரமான ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும். ஈரத் துணிகளில் இருந்து நம் உடலில் பங்கஸ் எனும் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஆவியில் வேகவைத்த உணவு

மழைக்காலங்களில் செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், காலை உணவை உண்ணும்போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூடியவரை இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளாக இருப்பது நல்லது.

பால் சார்ந்த உணவு

பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் சார்ந்த உணவுகளை மழைக்காலங்களில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

கொழுப்புகள் நிறைந்த உணவு

எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது நல்லது.

கீரை

மழைக்காலங்களில் கீரை உணவுகளை அதிகம் உண்ணாமலிருக்க வேண்டும்.

சிற்றுண்டி

நாவுக்கு ருசியாக இருக்கிறது என்பதற்காக மாலை நேரச் சிற்றுண்டியாக வடை, போண்டா, பஜ்ஜி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுப் பண்டங்களை அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

சிறுபூச்சிகளின் தொல்லை

மழைக்காலங்களில் கொசு, பூரான், வண்டு மற்றும் சிறுபூச்சிகளின் தொல்லைகள் அதிகம் இருக்கும். நொச்சி, வேம்பு போன்ற இலைகளை வீட்டுக்கு வெளியே தீயிட்டு கொளுத்தி புகைமூட்டம் போட்டால், கொசுக்களின் தொல்லை இருக்காது.

பூண்டுப்பால்

மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி நன்றாகக் கடைந்தால் அது பூண்டுப்பால். இதைச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, நெஞ்சுச்சளியால் ஏற்படும் மூச்சுத்திணறல், இருமல், தலைபாரம் போன்றவை நீங்கி இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.