ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை வன்மையா கண்டிக்கின்றோம்- வவுனியாதமிழ் ஊடகவியலாளர் சங்கம்

VVV
VVV

ஊடகவியலாளர்களான தவசீலன் மற்றும் குமணன் மீது சமூக விரோத செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்னமையாக கண்டிப்பதுடன் தாக்குதல் தாரிகளை உடன் கைது செய்து நீதியின் முன் நிறுத்த ஆவண செய்யப்பட வேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றோம் என ஊடகவியலாளர்கள் மீது வன்முறைகள் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – தமிழ் ஊடகவியலளார் சங்கம் தமிழ் ஊடகவியலளார் சங்கம் தெரிவித்துள்ளது

முல்லைத்திவு மாவட்டத்தில் இன்று ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் வெளியிடட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குரியாகி வருவது தொடர்பில் பல தரப்பினராலும் சுட்டிக்கப்பட்டப்பட்டு வரும் நிலையில் வடபகுதியில் தொடர்ந்தும் அதிகாரவர்க்கத்தினரால் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் இன மத பேதமின்றி ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டது மாத்திரமின்றி கொலையும் செய்யப்பட்ட வரலாறுகள் இலங்கையில் இடம்பெற்ற நிலையில் அவற்றுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

இதன் தொடர்ச்சியாகவே முல்லைத்தீவில் மரக்கடத்தல் மாபியாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவும் அவ்விடயங்கள் தொடர்பில் தமக்கு ஆதரவாக உள்ள அரச அதிகாரிகளை இனம் காட்டாது இருப்பதற்காகவும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளில் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றது.

இதன் ஒரு தொடர்ச்சியாகவே முல்லைத்தீவு ஊடகவியலாளர் தவசீலன் மற்றும் குமணன் மீதான தாக்குதலும் அமைந்துள்ளது.
.
ஒரு சில அதிகாரிகளின் துணையுடன் மரக்கடத்தலில் ஈடுபட்டு வரும் குழுவொன்று தொடர்பில் எவரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இதன் உண்மைத்தன்மையை வெளியுலகிற்கு கொண்டு வரும் நோக்கோடு செய்தி சேகரிக்க சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட இவ்வறான தாக்குதலை வன்மையாக வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கண்டிக்கின்றது.

அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்வர்களை சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை பாரபட்சமின்றி செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுவதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது இருப்பதனை இலங்கை அரசாங்கம் உறுதி செய்து அதனை ஊடகவியலாளர்கள் முன் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலளார் சங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.