கயிற்றின் மீது நடந்து உலக சாதனை படைத்த நபர்!

ஜேர்மனியில் மைதானத்தின் குறுக்கே கட்டப்பட்ட 230 மீற்றர் நீளமுள்ள கயிற்றின் மீது ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு நடந்து சென்று ஜென்ஸ் டெக்கே (Jens Decke) என்பவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நூரெம்பர்க் (Nuremberg ) நகரிலுள்ள மேக்ஸ் மொர்லாக் மைதானத்தில், 73 மீற்றர் உயரத்தில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஸ்லாக்லைனிங் (Slack Line) என அழைக்கப்படும் கயிறு மீது நடந்து செல்லும் இந்த விளையாட்டில், மைதானத்தின் குறுக்கே கடக்கப்பட்ட அதிகபட்ச தூரமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.