சர்வாதிகார ஆட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது – கரு ஜயசூரிய

இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று (22) எனவும் சர்வாதிகார ஆட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது எனவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில், அவர் தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டுமெனவும் சர்வாதிகார ஆட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும் அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக்கூடாது எனவும் அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.