’வலிமை’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அஜித் கொடுத்த சவால்!

அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார்.

இந் நிலையில் இத் திரைப்படம் குறித்து யுவர் சங்கர் ராஜா சமீபத்தில் அளித்த செவ்வியில் ” நேர் கொண்ட பார்வை’ திரைப் படத்திற்கு இசை அமைக்கும் போதே அஜித் தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பில்லா, பில்லா-2, மங்காத்தா என பலவற்றுக்கு பின்னணி இசைக்கு கிற்ராரைப் பயன்படுத்தியதால் ’வலிமை’ படத்தில் கிற்ரார் இல்லாமல் பின்னணி இசை அமைக்க முயற்சி செய்யுங்கள்’எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

அவருடைய வார்த்தையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, கிற்ரார் பயன்படுத்தாமல் ’வலிமை’ படத்தில் ஒரு பின்னணி இசையை அமைத்துள்ளேன்.மேலும் இதுவரை அந்த படத்தின் மூன்று பாடல்கள் முடிந்துவிட்டது. ஒரு சின்ன பின்னணி இசையும் முடிந்துவிட்டது என யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.