பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு சட்டநடவடிக்கை: ஆனோல்ட்

unnamed file 1
unnamed file 1

குருநகர் பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் காலம் ஒருவர் சட்ட நடவடிக்கைக்கு  உட்படுத்தப் படுவார்கள் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்

குருநகர் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் இனிவரும் நாட்களில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் அதிலும் குறிப்பாக குருநகர் ,பாசையூர்  பகுதி மற்றும் மீன் சந்தை பகுதியில் சுகாதார நடைமுறை பொலிஸார்  மற்றும் சுகாதார பிரிவினரால் இறுக்கமாகநடைமுறைப்படுத்தப்படும் அங்கு வருபவர்கள்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் 

குருநகர் மற்றும் பாசையூர் மீன் சந்தைக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்களோ அல்லது அல்லது வெளியிடங்களிலிருந்தோ வருவோர் கடும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் குறித்த நடைமுறை நாளை காலையிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளது 
எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில்  அவதானமாக செயற்படுமாறும்குறித்த நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது குருநகர் பாசையூர் சந்தைக்கு வருவோர் கட்டாயமாக தமது பதிவினை மேற் கொண்ட பின்னரே அப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.