மனதிற்க்குள் ஒரு சவால்!

h5dba20h success far side failure
h5dba20h success far side failure

நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் பல இன்னல்களையும், துன்பங்களையும் தினம்தோறும் சந்திக்கிறோம். ஒவ்வொரு பிரச்சனைகளையும்  தீர்ப்பதற்குள் அடுத்த பிரச்சனை தலையெடுத்து விடுகிறது. அதிலும் நம்மில் பலர் பிரச்சனைகளை கண்டு அஞ்சு ஓடுகிறார்க்ள,பயப்படுகிறார்கள் ஆனால் சிலர்தான் எல்லாவற்றயும்  சமாளித்து வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள்.

நாம் சிறியவர்களாக இருக்கும் போது பெற்றோர்கள் அழகான உலகத்தை காட்டினார்கள். இதுதான் இயற்கை, இதுதான் அன்பு ,இவைதான் மனிதம் என்று. அப்போது உலகம் அழகத்தான் இருந்தது. ஆனால் எல்லாம் சொல்லித்தந்தவர்கள் மனிதர்கள் இப்படித்தான், அவர்கள் இவ்வளவுதான் என்பதை மட்டும் அனுபவித்து அறிந்துகொள் என்று விட்டுவிட்டார்கள். பாவம் நொடிக்கு நொடி மாறும் பச்சோந்தியின் குணம் கொண்ட மனிதர்களின் உண்மை குணம் எதுவென்று தெரியாமல் நமக்கு சொல்லித்தராமல் போயிருக்கலாம்.

இந்த உலகத்திலே உன்னால் முடியும் ,நீ சாதிப்பாய் போன்ற தன்னம்பிக்கை வார்த்தைகளை கேட்பதை விட உன்னால் முடியாது, நீ இதற்க்கு சரிப்பட்டு வரமாட்டாய் என்ற சொற்களைத்தான் அதிகம் கேட்கின்றோம். நீ உருப்படவே மாட்டாய், எப்படி முன்னுக்கு வருவான் பார்க்கலாம் என்ற வார்த்தைகளுக்குள் சோர்ந்து போய்விடுகிறது நம்முடைய தன்னம்பிக்கை. அப்படி இல்லையென்றால் என்னையா இப்படி சொன்னாய்? என்று பழிவாங்க புறப்பட்டு விடுகிறோம் .

நீ முன்னேறு ,உன்னால் முடியும் என்ற வார்த்தைகளை விட மற்றவர்கள் சொல்கின்ற கடுமையான வார்த்தைகள்தான் உங்களுக்குள் புது ஊக்கத்தை தருகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? யாரும் நம்மை விமர்சிக்கும் போது மண்ணோடு மண்ணாக புதைந்து போய்விடாதீர்கள். விதையாக மாறி முளைக்க வேண்டும் ,கடலிலே அமுக்கினாள் நீரை குடித்து விட்டு இறந்துவிடக்கூடாது. முத்துடன் வெளிவர வேண்டும். நம் மீது வீசுகின்ற கற்களை பார்த்து இரத்த காயங்களோடு இறந்துவிட கூடாது. அவற்றை படிக்கற்களாக்கி மேலே வரவேண்டும் .

நாம் விழுந்து விட்டோம் என்றால் கைகொட்டி சிரிப்பார்கள்.அல்லது ஐயோ பாவம் என்று போலியாக கவலைப்படுவார்கள். அனால் யாரும் கைகொடுத்து தூக்கிவிட மாட்டார்கள். அதுதான் மனிதர்கள்.ஆனால் சாதனை மனிதர்கள் விழுந்த இடத்திலேயே கிடக்கமாட்டார்கள். எத்தனை சோதனைக்குள்ளும் சாதிப்பார்கள்.

எல்லா சந்தர்ப்பங்களையும் சாதகமாக அமைத்து சாதிப்பவனை விட தோல்விகள், துன்பங்கள், ஏமாற்றங்கள் இவற்றையெல்லாம்  தாண்டி வெற்றி பெறுவதே உண்மையான வெற்றி. முள்ளின் திறமையை பாருங்கள் காலால் மிதித்தவனை கையால் எடுக்க வைக்கிறது .முடியாதவன் தான் அடுத்தவனை பற்றி விமர்சிப்பான். முடியும் என நினைப்பவன் அடுத்ததை நோக்கி பயணிப்பான் ஆகவே பயணிப்போம் .சாதிப்போம்.

லோஜினி நாகராஜா