தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய சாதனை ஒன்றை நிகழ்த்த உள்ளது விஜய்யின் மாஸ்டர்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
சமீபத்தில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பட ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மாஸ்டர் படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகப் போவதாக வெளிவந்த வதந்தியை தொடர்ந்து கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழுவினர் அறிக்கையை வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா வரலாற்றில் பண்டிகை தினத்தில் ஒரே ஒரு படம் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கிட்டத்தட்ட 1000 தியேட்டர்களில் மேல் வெளியாவது இதுவே முதல்முறை.
மாஸ்டர் படம் தான் வேண்டும் என மொத்த திரையரங்கு உரிமையாளர்களும் கோரிக்கை வைத்ததன் காரணமாக வருகிற பொங்கலுக்கு மாஸ்டர் படம் மட்டுமே தமிழகம் முழுவதும் வெளியாகும் என்கிறார்கள்.