சற்று முன்
Home / சினிக்குரல் / நிவின்பாலி அம்மாவாக நடிக்கும் பிரித்விராஜின் அண்ணி

நிவின்பாலி அம்மாவாக நடிக்கும் பிரித்விராஜின் அண்ணி

நிவின்பாலி தற்போது மலையாளத்தில் நடித்து வரும் படம் துறைமுகம். நடிகை கீது மோகன்தாஸின் கணவரும் பிரபல ஒளிப்பதிவாளருமான ராஜீவ் ரவி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரித்திவிராஜ் அம்மாவாக நடிக்கிறார் மலையாள நடிகை பூர்ணிமா இந்திரஜித். இவர் மலையாள நடிகர் இந்திரஜித்தின் மனைவியும் நடிகர் பிரிதிவிராஜன் அண்ணியும் ஆவார்..

இவர் இருபது வருடங்களுக்கு முன்பு தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் தோழியாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 35 வயதான நிவின் பாலிக்கு 39 வயதான பூர்ணிமா எப்படி அம்மாவாக நடிக்கிறார் என்கிற ஆச்சரியம் அனைவருக்கும் எழுந்துள்ளது. ஆனால் மூன்று விதமான காலகட்டத்தில் நிகழும் இந்த கதையில் இளம்வயது நிவின்பாலிக்குத்தான் பூர்ணிமா அம்மாவாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

x

Check Also

ஒளிப்பதிவாளர் மீது அர்ஜுன் ரெட்டி நடிகை புகார்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி.. அந்தப்படத்தில் ...